மடக்கும் வசதி கொண்ட இந்த மாடலில் ஸ்டைலஸ் பேனா பயன்படுத்த முடியும். இத்தகைய வசதி கொண்ட முதலாவது மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 2 லட்சம் முறை மடக்கி சோதிக்கப் பட்டது. அப்போதும் இதன் செயல்பாட்டில் எவ்வித பிரச் சினையும் ஏற்படவில்லை என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மேல் பகுதியில் ஒரு திரை உள்ளது. இதன் மேல் பகுதி ஆர்மர் அலுமினியத்தால் ஆனது. கேலக்ஸி ஸ்மார்ட்போன் சீரிஸில் இத்தகைய உறுதியான அலுமினிய மேல்பாகம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை யாகும். நீர் புகா தன்மை கொண்டது. இதன் திரையில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது கீறல் விழுவதைத் தடுக்கும். கை தவறி கீழே விழுந்தாலும் உடையாத உறுதித் தன்மை கொண்டது. மேலும் திரையில் நெகிழ்வு தன்மை கொண்ட பி.இ.டி. பிலிம் உள்ளது. இது காட்சிகள் தெளிவாக தெரிய உதவுகிறது. மேலும் போனை மடக்கி மீண்டும் பயன்படுத்த உதவு கிறது.
கருப்பு, பச்சை, சில்வர் நிறங்களில் இது வந்துள்ளது. இதில் டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் ஆபீஸ் இயங்குதளம் கொண்டது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைப் போல இதைப் பயன்படுத்தலாம்.