அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்படும் சோனோஸ் நிறுவனம் ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான தாகும். இந்நிறுவனத் தயாரிப்புகளை புதுடெல்லியில் உள்ள லக்சுரி பர்சானிபைட் நிறுவனம் விற்பனை செய்வதோடு, விற்பனைக்கு பிந்தைய சேவையை அளிக்க முன்வந்து அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
முதலாவதாக இந்நிறுவனத்தின் சோனோஸ் 1 ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகமாகியுள்ளது. இது குரல்வழி கட்டுப்பாடு மூலம் செயல்படக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.21,999.
வீட்டினுள்ளும், வெளியிடங்களிலும் இதை எளிதில் எடுத்துச் சென்று பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் கிளாஸ் டி டிஜிட்டல் ஆம்பிளிபயர், நீண்ட நேரம் செயல்பட வசதியாக பேட்டரி, புளூடூத் இணைப்பு, வை-பை இணைப்பு வசதி உள்ளது.