தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. ஹைரெசல்யூஷன் மற்றும் விரைவாக படமெடுக்கும் திறன் கொண்டது. டிஜிட்டல் கேமராவில் மற்ற எல்லாவற்றையும் விட விரைவாக காட்சிகளை பதிவு செய்யும் நுட்பம் கொண்டதாக இது திகழ்கிறது. இது 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இதில் ஒருங்கிணைந்த மேம்படுத்தப்பட்ட போயன்ஸ் எக்ஸ்.ஆர். இமேஜ் பிராசஸிங் வசதி உள்ளது.
இது 155 முழுபிரேம் கம்ப்ரஸ்டு இமேஜ் பதிவு செய்யும் ஆற்றல் கொண்டது. ஜேபெக் வடிவில் 165 புகைப்படக் காட்சிகளை இதில் பதிவு செய்யலாம். ஒரு விநாடிக்கு 30 பிரேம்களை பதிவு செய்யும். இது 8-கே ரெசல்யூசனில் காட்சிகளை பதிவு செய்யக் கூடியது. இதற்கேற்ப இதில் ஆட்டோ போகஸ் வசதி உள்ளது.
இதில் உள்ள பயோன்ஸ் எக்ஸ்.ஆர். காட்சி பதிவாக்கம் மிக துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யும் திறன் கொண்டது. இதில் உள்ள சென்சார் நகரும் பொருட்களை விரைவாக பதிவு செய்யும். இதனால் பறவைகள், விலங்குகள் மற்றும் விமானத்தையும் கூட புகைப்படமெடுக்கலாம். காட்சிகளின் தத்ரூபத்தை விளக்கும் வகையில் வண்ணங்கள் அப்படியே பதிவாகும்.
இதில் கைரோ சென்சார் உள்ளது. இதனால் காட்சிகளை படம் பிடிக்கும்போது கேமரா அசைந்தாலும், பதிவாகும் படங்களில் எவ்வித அசைவும் தெரியாது. தொழில்நுட்ப கலைஞர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளை பதிவு செய்வோருக்கு ஏற்றது. இதன் விலை சுமார் ரூ.5.59,990.