சிறப்புக் கட்டுரைகள்

கடந்த 2019-ஆம் ஆண்டில் ரூ.7,513 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்த நிறுவன உரிமையாளர்கள்

கடந்த 2019-ஆம் ஆண்டில் நிறுவன உரிமையாளர்கள் ரூ.7,513 கோடிக்கு தமது பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

தினத்தந்தி

மும்பை

கடந்த 2019-ஆம் ஆண்டில் நிறுவன உரிமையாளர்கள் ரூ.7,513 கோடிக்கு தமது பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

பங்கு வெளியீடுகள்

நிறுவன அதிபர்கள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுகின்றனர். இதில் பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த வகையில் புதிய பங்கு வெளியீடுகள், இரண்டாவது பங்கு வெளியீடுகள், ஏலமுறை பங்கு விற்பனை, உரிமைப் பங்கு வெளியீடு, முன்னுரிமை பங்குகள் ஒதுக்கீடு, தனிப்பட்ட முறையில் பங்குகள் ஒதுக்குவது போன்ற பல வழிகள் கையாளப்படுகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டில் பல்வேறு வகையான பங்கு வெளியீடுகள் மற்றும் ஒதுக்கீடுகள் மூலம் நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.81,174 கோடி திரட்டி இருக்கின்றன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 28 சதவீதம் அதிகமாகும். அப்போது அது ரூ.63,651 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டில் பங்குச்சந்தைகளின் பிரதான பிரிவில் 16 நிறுவனங்கள் மட்டுமே புதிய பங்குகளை வெளியிட்டன. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.12,362 கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 60 சதவீதம் குறைவாகும்.

சென்ற ஆண்டில் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் தனிப்பட்ட பங்கு ஒதுக்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏனென்றால் மொத்தம் 11 நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் பங்குகள் ஒதுக்கி ரூ.35,238 கோடி திரட்டின. 2018-ஆம் ஆண்டை விட இது 112 சதவீதம் அதிகமாகும்.

2019-ஆம் ஆண்டில் 12 நிறுவனங்கள் உரிமைப் பங்கு வெளியீடுகள் வாயிலாக மொத்தம் ரூ.52,053 கோடி திரட்டி உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 176 சதவீதம் அதிகமாகும். (பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனம், தனது பழைய பங்குதாரர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட ஒரு விலையில் பங்குகளை வழங்குவதற்கு உரிமை பங்கு வெளியீடு என்று பெயர்).

61 சதவீதம்

இந்நிலையில், 2019 காலண்டர் ஆண்டில் நிறுவன உரிமையாளர்கள் ரூ.7,513 கோடிக்கு தமது பங்குகளை விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது, அந்த ஆண்டில் 16 புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்ட மொத்த நிதியில் (ரூ.12,362 கோடி) 61 சதவீதமாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது