சிறப்புக் கட்டுரைகள்

ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை தொட்டது

பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை தொட்டு 45,170 கோடி டாலர் என்ற அளவில் இருக்கிறது.

தினத்தந்தி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில், 22-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 35 கோடி டாலர் உயர்ந்து 44,860 கோடி டாலராக அதிகரித்து இருந்தது. டிசம்பர் 3-ந் தேதி நிலவரப்படி அது 45,170 கோடி டாலராக உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டி இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் தெரிவித்தார்.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், டிசம்பர் 3 வரையிலான காலத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு மொத்தம் 3,880 கோடி டாலர் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து முதல் முறையாக இவ்வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 45,000 கோடி டாலரை தாண்டி இருக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து