சிறப்புக் கட்டுரைகள்

ஒலிம்பிக் கொடியின் ரகசியம்

வெள்ளை நிறத்தில் உள்ள ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி அமைந்திருக்கும்.

தினத்தந்தி

வெள்ளை நிறத்தில் உள்ள ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி அமைந்திருக்கும். நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படும் பிரான்சின் பியாரே டி கோபர்ட்டின் 1913-ம் ஆண்டு இந்த கொடியை வடிவமைத்தார்.

வளையங்கள் ஒவ்வொன்றும் போட்டியிடும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களை பிரதிபலிக்கின்றன.

இந்த வளையங்கள் சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களில் இருக்கும். கொடியின் வெள்ளை நிறத்தையும் சேர்த்து இந்த 6 நிறங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடியிலும் இடம் பெற்றிருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டன. 1920-ம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நடந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?