சிறப்புக் கட்டுரைகள்

வை-பை இணைப்பு ஏற்படுத்த முடியாதபோது...

இன்று எண்ணற்ற பாஸ்வேர்டுகளை நினைவில் வைக்க வேண்டி உள்ளது.

வங்கிக் கணக்கு, சமூக வலைத்தள கணக்கு, மெயில் முகவரி கணக்கு இன்னும் பல்வேறு இடங்களில் பாஸ்வேர்டுகளை நினைவில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் ஒரே பாஸ்வேர்டை வைப்பது பாதுகாப்பானதல்ல. நெருக்கமான மற்றும் வித்தியாசமான பாஸ்வேர்டுகள் குழப்பத்தை தரக்கூடியது.

பாஸ்வேர்டு கொடுத்து தகவல் பரிமாற்றத்துக்கு உதவுவதில் வைபை இணைப்பும் ஒன்று. வைபையில் பாஸ்வேர்டு இல்லாமல் இருந்தால் எளிதில் தகவல் திருட்டு நடைபெற ஏதுவாகிவிடும் என்பதால் எல்லோரும் பாஸ்வேர்டு கொடுத்து வைப்பது வாடிக்கை. அதிகமாக பயன்படக்கூடிய வைபை பாஸ்வேர்டுகளை மற்றவர் மத்தியில் சொல்ல முடிவதில்லை. தானியங்கி முறையில் இணைப்பு ஏற்படுத்தும்போது பாஸ்வேர்டு பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி இணைப்பு ஏற்படுத்தாத ஸ்மார்ட்போன்கள், கணினிகளுடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது, திடீரென பாஸ்வேர்டு நினைவுக்கு வராமல் சிரமம் ஏற்படுத்தும். சிலர் பாஸ்வேர்டை யாரும் எளிதில் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக சிக்கலாக வடிவமைத்துவிட்டு திரும்ப நினைவுபடுத்த முடியாமல் தவிப்பது உண்டு.

இன்னும் சில நேரங்களில் அதிகமான இணைப்புகளாலும் எளிதில் வைபை இணைப்பு ஏற்படாமல் போகும். இதுபோல இன்னும் பல்வேறு காரணங்களாலும் பாஸ்வேர்டு மறதியும், குழப்பங்களும் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் என்ன செய்ய வேண்டும்?...

விண்டோஸ் அல்லது மேக் கருவிகளுடன்

விண்டோஸ் கணினியின் வைபை இணைப்புக்கான பகுதியில் ரைட் கிளிக்கில் செல்லுங்கள்.

இப்போது ஓபன் நெட்ஒர்க் அண்ட் சேரிங் சென்டர் என்பதை சொடுக்குங்கள்.

இப்போது திறக்கும் திரையில் சேஞ்ச் அடாப்டர் செட்டிங்ஸ் என்பதை சொடுக்குங்கள்.

வயர்லெஸ் பிராபர்டிஸ் சென்று ஷோ கேரக்டர்ஸ் என்பதை கிளிக் செய்யவும். இனி பாஸ்வேர்டை கொடுத்து மறுபடியும் இணைப்பு ஏற்படுத்துங்கள்.

மேக் கணினி அல்லது கருவிகள் என்றால்

வைபை ஐகானை கிளிக் செய்யவும்.

இப்போது ஓவன் நெட்ஒர்க் பிரிபெரன்ஸ் என்பதை சொடுக்கவும்.

இப்போது திறக்கும் திரையில் ஷோ பாஸ்வேர்டு கொடுத்து, பாஸ்வேர்டை தெரிந்துகொள்ளவும்.

பின்னர் மீண்டும் ஒருமுறை இணைப்பு ஏற்படுத்தி முயற்சிக்கவும்.

இணைப்பு ஏற்படாவிட்டால்

நெட் கேபிள் மூலம் விண்டோஸ் கருவிகளில் இணைக்கும்போது சில நேரங்களில் இணைப்பு கிடைக்காது.

வயரை இணைத்த நிலையில் ரவுட்டர்ஸ் பக்கத்தை திறக்கவும்

அதன் கணக்கு ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு கொடுக்கவும். இதுபற்றிய கூடுதல் விவரம் தேவைப்பட்டால் அதை கையாளும் முறை விளக்கப்பட்டுள்ள பகுதிக்குச் செல்லுங்கள்.

அது திறந்தவுடன் வைபை ஆப்சன் சென்று பாஸ்வேர்டு அல்லது செக்யூரிட்டி என்ற ஆப்சனை சொடுக்கவும்.

ஷோ பாஸ்வேர்டு என்பதை கிளிக் செய்து பாஸ்வேர்டை அறிந்து கொண்டு பின்னர் இணைப்பு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

இப்படியும் இணைப்பு கொடுக்கலாம்

பாஸ்வேர்டு இல்லாமல் இணைப்பு கொடுக்கவும் வைபையில் வசதி உண்டு. இதற்கு டபுள்யு.பி.எஸ். பொத்தானை பயன்படுத்த வேண்டும்.

ரவுட்டரின் அருகில்தான் இந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.இதை ஒருமுறை சொடுக்கி இணைப்பு கொடுத்துவிட்டால் அடுத்து தொடர்ச்சியாக இணைப்பில் இருக்கும்.

பாஸ்வேர்டு குழப்பங்கள் மற்றும் நவீன பாதுகாப்பு யுத்திகளின் அடிப்படையில் பாஸ்வேர்டு இல்லாமல் வைபை இணைப்பு கொடுக்கவும் புதிய வசதிகள் வந்துவிட்டன.

கியூ.ஆர். கோடுகளின் அடிப்படையில் இரு ஸ்மார்ட்போன்களின் இடையில் இணைப்பு கொடுக்கவும் நவீன ஆண்ட்ராய்டு பதிப்பில் வசதி அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு