சிறப்புக் கட்டுரைகள்

டொயோட்டோ ஹிலாக்ஸ்

டொயோட்டோ நிறுவனத்தின் பன்முக செயல்பாட்டு வாகன (எம்.பி.வி.) பிரிவில் ஹிலாக்ஸ் மாடலில் மூன்று வேரியன்ட்கள் வந்துள்ளன.

தினத்தந்தி

அதே போல டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஹிலாக்ஸ் காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்ட ஸ்டாண்டர்டு மாடல் விலை சுமார் ரூ.33,99,000. இதில் எம்.டி. ஹை மாடல் விலை சுமார் ரூ.35,80,000. ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட ஏ.டி. ஹை மாடல் விலை சுமார் ரூ.36,80,000. சர்வதேச அளவில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலாகும். 50 ஆண்டுகளாக இதில் 8 தலைமுறை மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. 180 நாடுகளில் இது பிரபலமான, பெருமளவிலான மக்களின் தேர்வாக விளங்குகிறது. இதுவரையில் 2 கோடி மக்கள் இந்தக் காரை பயன்படுத்தியுள்ளனர்.

இது 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் என்ஜினைக் கொண்டுள்ளது. இதில் 6 கியர்கள் உள்ளன. இரண்டு விதமான ஓட்டும் நிலைகள் (பவர் மற்றும் எகானமி) உள்ளன. டயரின் கோணத்தை கண்காணிக்கும் வசதி, முன்புற பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளும் உண்டு.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை