சிறப்புக் கட்டுரைகள்

புதிய வசதியுடன் டி.வி.எஸ். ஜூபிடர்

தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தயாரிப்புகளில் ஜூபிடர் மாடல் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரபலமானவை.

தினத்தந்தி

இதில் தற்போது ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.72,347. இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டார்ட்-ஸ்டாப் நுட்பத்துக்கு டி.வி.எஸ். இன்டெலிகோ என்று பெயர். இது ஸ்கூட்டர் ஸ்டார்ட் செய்வதை எவ்வித அதிர்வும் இன்றி செயல்படுத்த உதவுகிறது. 110 சி.சி. பிரிவில் இத்தகைய நுட்பம் உள்ள ஸ்கூட்டராக டி.வி.எஸ். ஜூபிடர் திகழ்கிறது. இது 7.5 ஹெச்.பி. திறனை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 8.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.

இதில் பியூயல் நுட்பம் உள்ளது. இதனால் எரிபொருள் சிக்கனமாக செயல்படுகிறது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 50.4 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நகர் பகுதிகளில் தற்போது புகுத்தப்பட்டுள்ள ஸ்டார்ட்-ஸ்டாப் நுட்பம் எரிபொருள் சிக்கனத்துக்கு மேலும் வழிவகுத்துள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை