சிறப்புக் கட்டுரைகள்

வேலையின்மை

உற்பத்தி திறன் குறைவினால் வருவது வேலையின்மை.

வெளிப்படை வேலையின்மை: படித்த மற்றும் படிக்காத மக்களிடையே காணப்படும் வேலையின்மை.

மறைமுக வேலையின்மை: உற்பத்திக்கு பங்களிப்பு செய்யாமல் ஒருவர் வேலையில் இருப்பது, அவரை நீக்கினாலும் உற்பத்தி திறன் மாறாது.

பருவகால வேலையின்மை: விவசாய துறையில் வருடம் முழுவதும் வேலை இருப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இருக்கும்.

இடைக்கால வேலையின்மை: ஒருவர் ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறும்போது ஏற்படுகிறது.

உராய்வு வேலையின்மை: சந்தை நிலவர மாற்றத்தால் தேவை குறைவு மற்றும் புதிய தொழில்நுட்ப அறிமுகம் காரணமாக ஏற்படுவது.