சிறப்புக் கட்டுரைகள்

உஷார் ரிப்போர்ட் டீ, காபி, மிளகு: கலப்படம் கண்டறிவது எப்படி?

காபி, டீ ஆகிய இரு பானங்களைத்தான் பெரும்பாலானோர் விரும்பி பருகுகிறார்கள். அவற்றை அதிகம் ருசிப்பது உடல்நல பாதிப்புக்கு வித்திடும் என்பது ஒருபுறமிருக்க, காபி, டீ தூள்களில் கலப்படம் செய்யப்படுவதும் ஆபத்தை அதிகப்படுத்துகிறது.

தினத்தந்தி

காபி, டீ ஆகிய இரு பானங்களைத்தான் பெரும்பாலானோர் விரும்பி பருகுகிறார்கள். அவற்றை அதிகம் ருசிப்பது உடல்நல பாதிப்புக்கு வித்திடும் என்பது ஒருபுறமிருக்க, காபி, டீ தூள்களில் கலப்படம் செய்யப்படுவதும் ஆபத்தை அதிகப்படுத்து கிறது. காபி, டீ தூள்களில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

டீ தூளில் கலப்படம் கண்டறியும் முறை:

* கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி அதில் ஒரு டீஸ்பூன் டீ தூளை போட வேண்டும். அதில் சில தூள்கள் மட்டும் கீழே படிய தொடங்கும். மற்றவை எல்லாம் தண்ணீருக்கு மேலே அப்படியே மிதந்து கொண்டிருக்கும். அத்துடன் தண்ணீரின் நிறம் மாறாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அது கலப்படமற்ற டீ தூள் என்பதை உறுதி செய்துவிடலாம்.

* டீ தூளில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதையும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி அதில் ஒரு டீஸ்பூன் டீ தூளை போட்டதும் தண்ணீரின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கும். டீ தூளும் அடியில் படிய தொடங்கிவிடும். எந்த அளவுக்கு டீ தூள் அடியில் படிகிறதோ அதற்கேற்ப தண்ணீரின் நிறம் மாறிக்கொண்டே வரும். ஏனெனில் டீ தூளில் கலப்படம் இருக்கும் பட்சத்தில் அது நீரின் நிறத்தில் வெளிப்பட தொடங்கிவிடும். டீ தூளும் நீரில் மிதக்க முடியாமல் டம்ளரில் அடியில் படிந்து கொண்டே இருக்கும். அந்த டீ தூள் போலியானது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

* டிஸ்யூ பேப்பரை கொண்டும் டீ தூளில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை எளிதாக கண்டறிந்துவிடலாம். டிஸ்யூ பேப்பரின் மேல் பகுதியில் சிறிதளவு டீ தூள் தூவி அதன் மேல் சில சொட்டுக்கள் தண்ணீர் விட வேண்டும். அப்போது தண்ணீரில் டீ தூள் கலந்து பேப்பரில் கசிய தொடங்கி அதன் நிறம் மாறினால் அது கலப்படமானது என்பதை அறிந்து கொள்ளலாம். டீ தூள் கலப்படம் செய்யப்படாததாக இருந்தால் டிஸ்யூ பேப்பரின் நிறம் மாறாது. டீ தூளும், தண்ணீரும் அதன் தன்மையை இழக்காமல் காட்சி தரும்.

காபி தூளில் கலப்படம் கண்டறியும் விதம்:

* காபி தூளில் சிக்கிரிதான் கலப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி அதில் காபி தூளை தூவ வேண்டும். காபி தூள் அப்படியே மேலே மிதந்தால் அது சிக்கரி கலக்காத காபி தூள். தண்ணீருக்குள் காபி தூளை தூவியதும் அது கரைந்து நிறம் மாறினால் அது கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக அர்த்தம். அதாவது காபி தூளில் கலக்கப்பட்டிருக்கும் சிக்கிரி தண்ணீரில் கரைந்து அந்த நிறத்தை மாற்ற தொடங்கிவிடும்.

அதேபோல் காபி தூள் கண்ணாடி டம்ளரின் அடிப்பகுதியில் தங்கினால் அதில் கலப்படம் சேர்க்கப்பட்டிருப்பதாக அர்த்தம்.

மிளகு: கருப்பு மிளகில் கலப்படம் சேர்க்கப்படுவதையும் நீர் மூலமே கண்டறிந்து விடலாம். கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு கைப்பிடி அளவு மிளகை போட வேண்டும். அது கலப்படம் இல்லாத தூய மிளகாக இருந்தால் டம்ளரின் அடியில் தங்கிவிட தொடங்கும். ஆனால் தண்ணீரில் போட்டதும் மிதந்த நிலையிலேயே இருந்தால் அது கலப்பட மிளகு என்பதை அறிந்து கொள்ளலாம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்