சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : 7-வது தலைமுறை பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ்

சொகுசு கார்களில் ஒன்றான பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய வரவுதான் 3 சீரிஸ். 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் வந்து உள்ளது. இது 3 சீரிஸில் 7-வது தலைமுறை மாடலாகும்.

தினத்தந்தி

கிளஸ்டர் ஆர்கிடெக்சர் (சி.எல்.ஏ.ஆர்.) எனும் பிளாட்பார்மில் இதை உருவாக்கி உள்ளனர். முந்தைய மாடலை விட இது நீளமானது, அகலமானது, உயரமானது. இதன் உட்பகுதியில் 8 அங்குல திரை உள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் 10 அங்குல திரை கொண்ட காரையும் தேர்வு செய்யலாம்.

பி.எம்.டபிள்யூ. சமீபத்தில் அறிமுகம் செய்த ஐ-டிரைவ் சிஸ்டம் இணைப்பு வசதி இதில் உள்ளது. 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட இது 258 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்த கூடியது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் 6 ஹெச்.பி. கூடுதலான திறன் கொண்டதாகும். டீசல் மாடலைப் பொறுத்தமட்டில் 2 லிட்டர் டீசல் என்ஜின் 190 ஹெச்.பி. திறன் கொண்டதாக வந்துள்ளது.

மெர்சிடஸ் பென்ஸ் சி, ஆடி ஏ4, ஜாகுவார் எக்ஸ்.இ. ஆகிய கார்களுக்கு போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை