சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : அமேஸ்பிட் ஜி.டி.ஆர். ஸ்மார்ட் வாட்ச்

அமேஸ்பிட் நிறுவனம் 1.39 அங்குல விட்டமுள்ள ஜி.டி.ஆர். ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை அமோலெட் நுட்பத்தால் ஆனது.

தினத்தந்தி

பேட்டரி 24 நாட்கள் வரை கடிகாரத்தை செயல்படுத்தும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.10,999 ஆகும். இதில் உறுதியான கொரில்லா கிளாஸ் உள்ளது. இது நீர்புகா தன்மை கொண்டது. இதனால் 50 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லலாம்.

இதில் 12 வகையான செயல் நிலைகள் உள்ளது. நடை, ஓட்டம், நீச்சல், மலையேற்றம், ஸ்கையிங், ஜி.பி.எஸ். பிளஸ் குளோநாஸ், பயோ டிராக்கர் பி.பி.ஜி., இருதய துடிப்பு அளவீடு, நினைவூட்டல், 24 மணி நேரமும் உடல் நிலையைக் கண்காணித்தல் அதாவது தூங்கும்போதும் உங்கள் உடல் நிலையை இந்த ஸ்மார்ட் வாட்ச் கண்காணிக்கும்.

இதன் திரையின் வெளிச்ச அளவை தேவைக்கேற்ப கூட்டி, குறைத்துக் கொள்ளலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 நாட்கள் தொடர்ந்து இயங்கும்.

புளூடூத் வசதி கொண்டது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மேல் கேஸ் கொண்டது. இதற்கு பிரவுன் நிற தோல் ஸ்டிராப் அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்