கே.டி.எம் 10.எக்ஸ் என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. மிகவும் மெல்லிய தாக வெளியிடத்தில் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விரை வாக சார்ஜ் ஆவதோடு, இதன் மூலம் சார்ஜ் ஏற்றும் மின்னணு சாதனங்கள் உடனடியாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மின்னணு சாதனம் என்பதால் அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளன.
மின் அழுத்த வேறுபாடு, கூடுதலாக வெப்பமடைவது போன்ற நிகழ்வுகளுக்கு இது தாமாகவே தீர்வு கண்டுவிடும். ஸ்மார்ட்போன்களை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். இது சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும்.