லேஸர் புரொஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்டது இது . புளூடூத் இணைப்பு மூலமும் இதை செயல்படுத்தலாம். திரைக்கு மிக அருகாமையில் வைத்து இந்த புரொஜெக்டரை பயன்படுத்த முடியும்.
மிக துல்லியமாக காட்சிகளை வெளிப்படுத்துவதோடு இதனுள் வெளிச்சமும் அறையின் சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு திறன் இதற்கு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.4,99,999.