புரோ வயர்லெஸ் பவர்பேங்க் இந்நிறுவனம் உருவாக்கிய புத்தாக்க சாதனமாகும். எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும் வயர் இணைப்பு இல்லாமலேயே சார்ஜ் செய்யும் வசதி கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனுள் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆவதோடு இதன் மூலம் சார்ஜ் செய்யப்படும் பொருட்கள் விரைவாக சார்ஜ் ஏறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான நேரத்திலேயே இதன் வயர்லெஸ் இணைப்பு மூலம் சார்ஜ் செய்ய முடியும்.
அதிக திறன் கொண்ட பேட்டரி உள்ளதால் இதன் மூலம் லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களையும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளமுடியும். இதில் 9 சுற்றுகளைக் கொண்ட பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் உள்ளதால் அதன் மூலம் இரண்டு சாதனங்களையும் மேல் பகுதியில் ஒரு சாதனத்தையும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் விலை சுமார் ரூ.2,999.