சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : சாம்சங் கேலக்ஸி ஏ 51 அறிமுகம்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது பிரபலமான கேலக்ஸி மாடலில் ஏ 51 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

சமீபத்தில் இந்நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் மற்றும் கேலக்ஸி எஸ் 10 லைட் என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. தற்போது சற்று குறைந்த விலையில் ஏ 51 கேலக்ஸி மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில்தான் இந்த மாடல் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 6.5 அங்குல அமோலெட் திரையைக் கொண்டதாக வந்துள்ளது. இதில் கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 9611 ஆக்டாகோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாடல்கள் வந்துள்ளன. ஒன்று 6 ஜி.பி. ரேம் மற்றொன்று 8 ஜி.பி. ரேம். இதன் நினைவகம் 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. கொண்டதாக உள்ளது. நினைவகத் திறனை அதிகரிக்க எஸ்.டி. கார்டு வசதி உள்ளது. இதில் உள்ள கேமரா 48 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது.

முன்புறம் 32 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா செல்பி பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. அத்துடன் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் 15 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் வசதி கொண்டதாக வந்துள்ளது. கருப்பு,வெள்ளை, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு