அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய ஹாரன்களையும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களையும் சட்டவிரோதமாக பொருத்திக் கொண்டு, வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியை, பெங்களூரு காவல் துறை மேற்கொண்டிருக்கிறது. பெங்களூரு மாநகரில் அதிக சத்தத்துடன் சுற்றித்திரியும் பைக்குகளை மடக்கி பிடிக்கும் போலீசார், அந்த பைக்குகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருக்கும் சைலன்சர்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.