புதுடெல்லி,
கிரிக்கெட் மைதானத்தில் தனது ஆக்ரோஷமான நடவடிக்கையால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி.
இந்திய விளையாட்டு வீரர்களில் சமூக வலைதளங்களில் அதிக பயனாளர்கள் பின்தொடரும் வீரராக கோலி இருந்து வருகிறார்.
டுவிட்டரில் சில கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், உலகம் முழுதும் உள்ள பிரபலங்கள் செய்த ஹீலியம் பலூன் சேலஞ்சை அவரும் மேற்கொண்டுள்ளார்.
அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
மைதானத்தில் ஆக்ரோஷத்துடனும் சமூக வலைதளங்களில் கூலாகவும் இருக்கும் கோலியின் வீடியோவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.