இது ஸ்டீரியோ வசதி கொண்டிருப்பதால் மிகச் சிறப்பாக இசையைக் கேட்டு மகிழலாம். இது புளூடூத் 5.2 இணைப்பு வசதி, 40 டெசிபல் வரையில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க் கும் நுட்பம் கொண்டது. எடை (4.7 கிராம்) குறைவானது. 45 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி இருப்பதால் இது 8 மணி நேரம் வரை செயல்படும். நீலம், வெள்ளை நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.5,665.