செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.

அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக க. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக கட்சியின் சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தார். கட்சி நிகழ்ச்சிகள் ஒரு வாரகாலம் ஒத்தி வைக்கப்படும் எனவும், கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பேராசிரியர் க. அன்பழகனின் மறைவு தி.மு.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு