புதுடெல்லி,
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, நேற்று நாடாளுமன்றத்தில் விவசாயசந்தை கட்டமைப்பு நிதியம் குறித்தும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியலின விவசாயிகளுக்கு ஏதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறதா? எனவும் மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய மந்திரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் விவசாய கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ள மாநில அரசுகளுக்கு உதவி வழங்கப்படும். மாநில அரசுகளிடம் இருந்து இதற்கான திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.