பெருந்துறை,
பெருந்துறை சிலேட்டர் நகரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தங்கும் விடுதி திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சைபுதீன் தலைமை தாங்கினார். விழாவில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் விடுதியை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இதில் பெருந்துறை வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் விஜயன் என்கிற ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.வி.பாலகிருஷ்ணன், கருமாண்டிசெல்லிபாளையம் நகர செயலாளர் கே.எம்.பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விடுதி காப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.