முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகீர்ஷா சவுக் பகுதியருகே பள்ளி கூடம் முடிந்து 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது இரு தோழிகளுடன் வீடு திரும்பி கொண்டிருந்து உள்ளார்.
அந்த வழியே பைக் ஒன்றில் திடீரென வந்த 2 வாலிபர்கள் அவர்களை ஈவ் டீசிங் செய்துள்ளனர். இதனை அருகே இருந்த 2 பேர் தட்டி கேட்டுள்ளனர். அந்த வாலிபர்களை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை வாலிபர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.
அதன்பின் மாணவியையும் வாலிபர்கள் அடித்து உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.