செய்திகள்

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, வரலாற்று சிறப்புமிக்கது: குலாம்நபி ஆசாத் கருத்து

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, வரலாற்று சிறப்புமிக்கது என குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம்நபி ஆசாத் கூறியதாவது:-

இந்த உத்தரவை வரவேற்கிறோம். முதல் முறையாக காஷ்மீர் மக்களின் உணர்வுகளை சுப்ரீம் கோர்ட்டு பேசி இருக்கிறது. இதற்காகத்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள், குறிப்பாக காஷ்மீர் மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக சுப்ரீம் கோர்டடுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அரசு, ஒட்டுமொத்த நாட்டையும் திசைதிருப்பியது. ஆனால், இந்த முறை, சுப்ரீம் கோர்ட்டு எந்த நிர்ப்பந்தத்துக்கும் உட்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு