செய்திகள்

தெலுங்கானா என்கவுன்ட்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தெலுங்கானா என்கவுன்ட்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் என்கவுன்ட்டர் செய்த போலீஸாரை விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜி.எஸ். மணி, பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் தனித்தனியாகப் பொதுநலமனு தாக்கல் செய்தனர்.

இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்டில் இன்று தொடங்கியது. விசாரணையின் போது, குற்றவாளிகள் 4 பேருமே போலீசாரை தாக்கினார்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் தெலுங்கானா என்கவுன்ட்டர் குறித்த உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும், இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த விசாரணையை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், முன்னாள் நீதிபதி ரேகா பிரகாஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை