செய்திகள்

பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து

நாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

17-வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட சுற்றுகளின் முடிவு அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 326 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதே நிலை நீடித்தால், பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. இதனால், பாஜக தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுள்ளனர்.

இந்தநிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பாஜகவுக்கும் மிகப்பெரும் வெற்றியை உறுதி செய்துள்ள பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து