கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு..!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன.

அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.

அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று 1018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்