தமிழக செய்திகள்

வேலூர்: குளத்தில் மூழ்கி 4 பெண்கள் பலி - குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்

4 Women Died While drowning in Pond Vellore

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் தங்கம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை சென்றுள்ளனர்.

கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளனர். அப்போது, குளத்தில் ஆழம் அதிகமாக இருந்த நிலையில் 4 பெண்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய 4 பெண்களும் உயிரிழந்தனர். இதையடுத்து விரைந்து வந்த உறவினர்கள், கிராமத்தினர், போலீசார் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்களின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து