சென்னை,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புனேவில் இருந்து 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஐதராபாத்தில் இருந்து 72 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளும் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அந்த தடுப்பூசிகளை தமிழக சுகாதார அதிகாரிகள், கன்டெய்னர் மூலமாக சென்னையில் உள்ள மருத்துவ தலைமை கிடங்குக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு தடுப்பூசி மருந்துகள் பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.