தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள நடுவீரை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 32). பெரிய வீரை கிராமத்தை சேர்ந்தவர் கோசலை ராகவன் (62). இவருடைய மனைவி காளியம்மாள், மகன் பிரசன்னா (23). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கண்ணாத்தாள். ராகவன், ரவிக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து ரவியை தாக்கியதாக வேலாயுதப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிமுத்து குற்றம் சாட்டப்பட்ட கோசலை ராகவனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அவரது மகன் பிரசன்னாவுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.