தமிழக செய்திகள்

தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவி சாதனை

தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவி சாதனை படைத்தார்.

தினத்தந்தி

திருச்சி, பொன்மலை பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ரிபாயா. இவர் நேற்று பொன்னகரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி காலை 6.20 மணிக்கு சிலம்ப ஆசான் தங்கராஜ் முன்னிலையில் சிலம்பம் சுற்றத் தொடங்கிய ரிபாயா, 10 மணி நேரம் 10 நிமிடம் 10 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி புதிய சாதனை படைத்தார். முதலில் அவர் 9 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது அவர் கூடுதல் நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். நிகழ்ச்சிக்கு கராத்தே மாஸ்டர் ஜெட்லி நடுவராக இருந்து ரிபாயாவின் சாதனையை ஜெட்லி புக் ஆப் ரெக்காட்சில் பதிவு செய்தார். மேலும் சாதனை படைத்த மாணவிக்கு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சக வீரர்-வீராங்கனைகள் மற்றும் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை