தமிழக செய்திகள்

விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கடந்த 20-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.