தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், ஆடைகளுக்குள் கட்டுக்கட்டாக சவுதி ரியால்கள் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா. அது ஹவாலா பணமா? என இலங்கை பெண்ணிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது