தமிழக செய்திகள்

வெறிநாய் கடித்து 10 பேர் காயம்

சுவாமிமலை பகுதியில் வெறிநாய் கடித்து 10 பேர் காயம் அடைந்தனர். சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கபிஸ்தலம்:

சுவாமிமலை பகுதியில் வெறிநாய் கடித்து 10 பேர் காயம் அடைந்தனர். சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெறிநாய் கடித்தது

சுவாமிமலை போலீஸ் நிலையம் அருகிலுள்ள மோட்டான்த்தெருவில் கடந்த சில நாட்களாக நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இ்ந்த நிலையில் அதே பகுதியை சோந்த கவிராஜ் (வயது15), ஹரீஸ்(7) ஆகிய 2 பேர் நேற்று மாலை தங்களது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்பாது அங்கு வந்த வறிநாய், அவர்களை கடித்தது.

இதனால் அவர்கள் சத்தம் போட்டனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் வெறிநாயிடம் இருந்து சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 பேர் காயம்

இதை தொடர்ந்து இந்த வெறிநாய், பேஷ்வார்த் தெருவில் நின்று கொண்டிருந்த கவிதா (40), கள்ளர்தெருவைச் சேர்ந்த நிவித்ரா (6), உள்பட 10 பேரை கடித்து குதறியது.. இதில் 5 பேர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மீதமுள்ள 5 பேர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர்.

மேற்கண்ட பகுதியில் அதிக அளவில் சுற்றித்தெரியும் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...