தமிழக செய்திகள்

தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தினத்தந்தி

பட்டிவீரன்பட்டியை அடுத்த நெல்லூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி இவர், 17 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தார். மேலும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரமும் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் விக்னேஷை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட விக்னேசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு