தமிழக செய்திகள்

தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

17 வயது சிறுமியை கத்தி முனையில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தினத்தந்தி

17 வயது சிறுமியை கத்தி முனையில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

போக்சோ வழக்கு

திருபுவனை சின்னப்பேட்டை 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி அந்த பகுதியை சேந்த 17 வயது சிறுமியை கத்தி முனையில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருபுவனை போலீசில் அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னையில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

10 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தலைமை நீதிபதி செல்வநாதன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மணிகண்டன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்