தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே 100 கிலோ குட்கா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஒபுலாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக 100 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிகடைக்காரரான ஓடிசா மாநிலத்தை சேர்ந்த தஷ்மன் நாயக் (வயது 37) என்பவரை கைது செய்தனர். மேலும் குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்