தமிழக செய்திகள்

சென்னை மீனம்பாக்கம் சித்தா கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 100 பேர் குணமடைந்தனர்

மீனம்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சித்தா கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை அங்கு சிகிச்சை பெற்ற 100 கொரோனா நோயாளிகள் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவ்வாறு குணமடைந்தவர்களுக்கு மருத்துவ பெட்டகத்தை சிகிச்சை மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாய் சதீஷ் இன்று வழங்கினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்