நாகர்கோவில்,
கேரளாவில் இன்றைக்கு 4-வது நாளாக ஓணம் கொண்டாடப்படுகிறது. அத்தப்பூ கோலம் இட பலவகை மலர்கள் தேவைப்படுவதால் கேரளா வியாபாரிகளும், பொதுமக்களும் தோவாளை சந்தையில் கூடியுள்ளனர்.
இன்று 100 டன்கள் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகி வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பிச்சிபூ ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கோழிப்பூ ரூ. 70 வாடாமல்லி ரூ.200 கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.900, சம்பங்கி ரூ.300, அரணி ரூ. 250, தாமரை ரூ. 6, கொழுந்து ரூ.120, துளசி ரூ. 30 என எல்லா பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஓணத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இதை விட பூக்கள் வரத்து அதிகமாகவும், விலை உயர்வும் காணப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.