தமிழக செய்திகள்

கூவம் ஆற்றில் கழிவு நீர் விட்ட 4 லாரிகள் சிறை பிடிப்பு - 40,000 அபராதம்

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் கழிவு நீர் விட்ட 4 லாரிகளுக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்:

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட கூவம் ஆற்றில் திருவள்ளூர் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக கூவம் ஆறு மாசுபட்டு, நிலத்தடி நீர் மாசுபடும் நிலை உள்ளது. அவ்வாறு கூவம் ஆற்றில் கழிவு நீர்களை கொட்ட செய்யக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தினார்கள்.

இருப்பினும் இது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கூவம் ஆற்றில் கழிவு நீரை கொண்டு வந்து கொட்டிய 4 லாரியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் உடனடியாக திருவள்ளூர் நகர்மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜுலு, சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வந்தனர்.

மேற்கண்ட 4 லாரிகளையும் பறிமுதல் செய்து அந்த லாரிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் விதித்தனர். மேலும் இனிவரும் காலங்களில் கழிவு நீரை கூவம் ஆற்றில் விட்டால் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்