தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் கைது

சென்னையில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் ''புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை" என்ற பெயரில் அவ்வப்போது சிறப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் பள்ளி-கல்லூரி அருகே குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 350 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குட்கா புகையிலை பொருட்களை விற்ற 74 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 34 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 505 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரே நாளில் 101 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து