தமிழக செய்திகள்

தொழில் நுட்ப கோளாறு காரணமாக 108 ஆம்புலனஸ் சேவை பாதிப்பு

தொழில் நுட்ப கோளாறு காரணமாக 108 ஆம்புலனஸ் சேவை பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை,

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 108 சேவை எண் பாதிப்பு அடைந்துள்ளது. தொழில்நுட்பக்கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் 108 சேவை இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் தற்காலிகமாக 044-40170100 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.