தமிழக செய்திகள்

1 மணி நேரம் முடங்கிய 108 சேவை பாதிப்பு சீரானது

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு 108 சேவை பாதிப்பு சீரானது.

சென்னை,

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தெழில்நுட்ப பிரச்சினை காரணமாக 108 சேவை எண் பாதிப்பு அடைந்தது. மாற்று ஏற்பாடாக 044 40170100 என்ற தற்காலிக எண்ணை தெடர்பு கெள்ள அறிவுறுத்தப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய ஆம்புலன்ஸ் சேவையால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். இந்தநிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 108 சேவை எண் பாதிப்பு சீரானது. வழக்கம்போல் 108 சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.