தமிழக செய்திகள்

108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

108 ஆம்புலன்சில்

கோபி அருகே உள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. விவசாய கூலி. இவருடைய மனைவி வள்ளி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

கடுக்கம்பாளையம் அருகே சென்றபோது வள்ளிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் டிரைவர் சக்திவேல் ஆம்புலன்சை ரோட்டோரமாக நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவ நுட்புநர் ரமேஷ் உதவியுடன் டிரைவர் பிரசவம் பார்த்தார். இதில் வள்ளிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும்-சேயும் பத்திரமாக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்