தமிழக செய்திகள்

10,12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

10,12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளையும், 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாளும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தோல்வியடந்தவர்களுக்கான துணைத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

* பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு - 28.10.2020 (புதன் கிழமை) காலை 11 மணி

* மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு - 28.10.2020 (புதன் கிழமை) பிற்பகல் 2 மணி

* மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு - 29.10.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி

மேற்கண்ட தேதிகளில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 03.11.2020 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 04.11.2020 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து