தமிழக செய்திகள்

10-ம் வகுப்பு கணிதத்தேர்வு 45,618 மாணவர்கள் ஆப்சென்ட் - தேர்வுத்துறை தகவல்

இன்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 10-ம் பொதுத்தேர்வு 6-ந் தேதியும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதியும் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு கணித தேர்வை 45 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என்பது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்