தமிழக செய்திகள்

தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

விருதுநகர்,

சிவகாசி அருகே தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்த ராஜ்-தனலட்சுமி என்ற தம்பதியினரின் மகள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் மற்றொரு மாணவியை பார்த்து காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்த ஆசிரியை, பெற்றோரை அழைத்து வரும்படி மாணவியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து