தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று 10-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 10-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.

தினத்தந்தி

மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் இதுவரை 6.20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

மெகா தடுப்பூசி முகாமில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வியாழக்கிழமை 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

10-வது கட்டம்

இந்த நிலையில் 10-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று (21-ந் தேதி) நடைபெறுகிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படாது எனவும், 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படும் என்றும், எனவே, 2-வது தவணைக்கான கால அவகாசம் முடிந்துள்ள 71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது தமிழக அரசிடம் ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்