சென்னை,
சென்னை ஆவடி பகுதியில் 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
11.02.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்க்குட்பட்ட சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை/மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வாயிலாக ரூ.8,77,593/- (ரூபாய் எட்டு இலட்சத்து எழுபத்து ஏழாயிரத்து ஐந்நூற்று தொண்ணூற்றி மூன்று மட்டும்) இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.36,000/- (ரூபாய் மூப்பத்து ஆறாயிரம் மட்டும்) செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.